கையால் சைகை காட்டி அனைவரையும் நடக்க விட்ட சார்ளஸ்: குடும்பத்தை ஒன்று சேர்க்க பக்க திட்டாம் !

மகாராணியாரின் கணவர் இளவரசர் பிலிப், இறுதிக் கிரிகைகள் முடிவடைந்த பின்னர். சென் ஜோர்ஜ் தேவலயத்தில் இருந்து வெளியே வந்த அரச குடும்ப அங்கத்தவர்களை ஏற்றிச் செல்ல அவர்களது கார் வந்தது. ஆனால் அதனை சைகைப் பாஷையில் அங்கிருந்து செல்லும்படி சார்ளஸ்சின் பணிப்பாளர் கூறிவிட்டார். இதனால் அனைத்து கார்களும் அங்கிருந்து சென்றுவிட்டது. இதனை அடுத்து வின்சர் கோட்டைக்கு பொடி நடையாக நடந்து செல்லவேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது. இததை வேண்டும் என்றே சார்ளஸ் உருவாக்கினார். ஏன் எனில்…

அப்படி என்றால் தான் அமெரிக்காவில் இருந்து வருகை தந்த ஹரி மற்றும் அவரது அண்ணா வில்லியம் ஆகியோர் பேசிக் கொண்டு நடந்து வர ஏதுவாக இருக்கும். அங்கிருந்து வின்சர் கோட்டைக்கு நடப்பதற்கு எப்படி என்றாலும் 12 நிமிடங்கள் பிடிக்கும். அந்த நேரத்திலாவது அண்ணா தம்பி பேசிக்கொள்ளட்டும் என்று அப்பா(சார்ளஸ்) திட்டம் போட்டே இவ்வாறு செய்துள்ளார். பாருங்கள் ஒரு குடும்பத்தை ஒன்று சேர்க்க அப்பா அம்மா, தொடாக்கம் பாட்டி பாட்டன் வரை எந்த அளவு கஷ்டப்படவேண்டி உள்ளது இந்த நவீன உலகத்தில்.

இல்லையென்றால் இளவரசர் ஹரி அமெரிக்காவில் இருந்து வந்து. தனது கோட்டையான பொஃக்மோரில் தங்கிவிட்டு. இறுதிக் கிரிகைகளில் கலந்துகொண்டு விட்டு. அப்படியே மீண்டும் அமெரிக்கா சென்ருப்பார். மேலும் அப்படியே அவர் தனது அண்ணாவுடன் பேசுவதாக இருந்தால் கூட அருகில் பலர் இருப்பார்கள். மனம் விட்டு எதனையும் பேச முடியாது. ஆனால் இப்படி தனியாக நடந்து செல்லும் வேளையில் அவர்களால் பேச முடியும். இந்த தருணத்தில் வில்லியத்தின் மனைவி மிகவும் நாசூக்காக, தனது கணவரோடு சேர்ந்து நடக்காமல் பின் வாங்கிக் கொண்டார். இதனால் ஹரியும் அவர் அண்ணா வில்லியமும் தனியாக பேசிக் கொண்டு செல்ல அவர் சந்தர்பத்தை வழங்கியுள்ளார்.

மேலும் நடைபெற்ற அண்ணா தம்பி பேச்சு வார்த்தையின் அடிப்படையில். பாட்டி(மாகாராணியின்) பிறந்த தினத்திற்கும் லண்டனில் நின்று செல்ல ஹரி திட்டம் தீட்டியுள்ளார். அவர் உடனடியாக அமெரிக்கா கிளம்புவது என்று திட்டம் தீட்டி இருந்தார். ஆனால் தற்போதைய சூழ் நிலையில் மகாராணியுடன் சில நாட்கள் மேலதிகமாக இருக்க அவர் தனது மனதை மாற்றிக் கொண்டுள்ளார். இதுவே ஒரு நல்ல சகுனம் என்று கூறப்படுகிறது.

Contact Us