என் கணவருக்கு முத்தம் கொடுக்கணும்னா எப்படி கொடுப்பேன்’… ‘இப்போ நாங்க என்ன சொல்லிட்டோம்’…’போலீசாரிடம் சீறிய பெண்’… வைரலாகும் வீடியோ!

நடுரோட்டில் வைத்து போலீசாரிடம் வாங்குவதில் ஈடுபட பெண் மாற்று அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

Delhi couple, stopped for not wearing mask, misbehaves with cops

டெல்லியில் இன்று இரவு 10 மணி முதல் வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், டெல்லியின் டரியங்கஞ்ச் பகுதியில் போலீசார் நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஒரு காரை மறித்து போலீசார் சோதனை செய்தனர்.

Delhi couple, stopped for not wearing mask, misbehaves with cops

அதிலிருந்த கணவன் மனைவியான பங்கஜ் குப்தா மற்றும் அப்ஹா குப்தா இருவரும் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை முகக்கவசம் அணியும் படி போலீசார் வலியுறுத்தினர். அப்போது, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பங்கஜ் குப்தா, நீங்கள் ஏன் என் காரை நிறுத்தினீர்கள்? எனது மனைவியுடன் எனது காரில் நான் இருக்கிறேன்’ என்று கூறினார்.

Delhi couple, stopped for not wearing mask, misbehaves with cops

நான் என் கணவருக்கு முத்தம் கொடுப்பேன். நீங்கள் தடுத்து நிறுத்துவீர்களோ”? என்றார். இதனிடையே ஒரு மாஸ்க் தானே போடச் சொன்னோம் அதற்காக இப்படி என்ற ரீதியில் போலீசார் நொந்து போனார்கள். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பங்கஜ் குப்தா மற்றும் அவரது மனைவி அப்ஹா குப்தாவை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

Delhi couple, stopped for not wearing mask, misbehaves with cops

அங்கு இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு பங்கஜ் குப்தா நேற்று கைது செய்யப்பட்டார். ஆனால், அவரது மனைவி அப்ஹா குப்தாவை போலீசார் நேற்று கைது செய்யவில்லை. இந்நிலையில், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அப்ஹா குப்தாவை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Delhi couple, stopped for not wearing mask, misbehaves with cops

கைது செய்யப்பட்ட தம்பதியர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.  மாஸ்க் போட சொன்ன ஒரே காரணத்திற்காக அப்ஹா குப்தா போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வீடியோ வெளியான நிலையில் பலரும் அவரின் செயலுக்குக் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

Contact Us