திறப்பு விழா முடிந்ததும் மூடு விழா’… ‘யூடியூப்வில் வந்த ரிவ்யூ, அதிரடி ஆஃபர்’… பிரபல பிரியாணி கடைக்கு வந்த சோதனை!

சென்னையில் திறப்பு விழா அன்றே பிரபல பிரியாணி கடைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Due to Covid Violation, wedding biryani velachery sealed by officials

Due to Covid Violation, wedding biryani velachery sealed by officials

அங்குக் கூடியிருந்த மக்களிடையே சமூக இடைவெளி என்பது காணப்படவில்லை. இதனை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் வந்து கடையை மூடும்படி அறிவுறுத்தினர். இதற்கிடையே மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள், தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்டம் கூடவில்லையா? அப்போது யார் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தார்கள். அப்போதெல்லாம் கொரோனா பரவவில்லையா இப்போது மட்டும் பரவுமா என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Due to Covid Violation, wedding biryani velachery sealed by officials

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் கடைக்கு அரை மணி நேரம் அனுமதி வழங்கினர். அதற்குள் பில் வாங்கிய நபர்களுக்குப் பிரியாணி கொடுத்துவிடும் படி கூறினர். பின்னர் கடைக்குச் சீல் வைத்தனர்.

Contact Us