லண்டனில் மே 18 திட்டமிட்டபடி நடைபெறும்- தமிழ் ஒருகிணைப்புக் குழு(TCC) அறிவிப்பு !

பிரித்தானியாவின் மையப் பகுதியில் மே 18 ஊர்வலம் திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. முதலில் 30 பேர்வரையே கலந்து கொள்ள முடியும் என்று தெரிவித்த பொலிசார். தற்போது சில தளர்வுகளை ஏற்படுத்த சம்மதித்துள்ளார்கள். இதன் அடிப்படையில் அனைவரும் முக கவசம் அணியவேண்டும். மேலும் 2 மீட்டர் இடைவெளியில் செல்லவேண்டும். ஏற்பாட்டாளர்களிடம் சுத்திகரிப்பு திரவம்  (சனடைசர்கள்) இருக்கவேண்டும். மேலும்….

கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் நெறிப்படுத்துவோர் இருக்கவேண்டும் என்று பல கட்டுப்பாடுகளை பொலிசார் போட்டுள்ளார்கள்.  இதில் மாற்றங்கள் ஏதாவது இருந்தால், பிரித்தானியா TCC பின்னர் அறிவிக்கும்.   இருப்பினும் மே 18 ஊர்வலம் நடக்க…தடைகள் பெரிதாக இல்லை என்பது அனைவருக்கும் நிம்மதி தரும் ஒரு விடையமாக உள்ளது.

எனவே தமிழர்களே மே 18 ஒரு செவ்வாய்க் கிழமை வருகிறது. எனவே முன்கூட்டியே விடுமுறைகளை எடுத்து தயாராக இருப்பது நல்லது.

Contact Us