பாவிக்காமல் வைத்திருக்கும் கிரெடிட் கார்ட்: தொகையைக் குறிக்கும் பாக்கிளேஸ் வங்கியின் செயல் !

பிரித்தானியாவில் பல மில்லியன் மக்களிடம் பாக்கிளேஸ் வங்கியின் கிரெடிட் கார்ட் உள்ளது. சிலர் தனை பாவித்து இருப்பார்கள். சிலர் அதனை பாவிக்காமல் வைத்திருப்பார்கள். மேலும் சிலர் ஒதுக்கப்பட்ட தொகையை முழுமையாக பாவிக்காமல் கொஞ்ச பணத்தை பாவித்து இருப்பார்கள். ஆனால் தற்போது பாக்கிளேஸ் வங்கி, பல ஆயிரம் நபர்களின் கிரேடிட் லிமிட்டை குறைத்து வருகிறது. அதிலும் பாவிக்காமல் வைத்திருக்கும் நபர்களின், லிமிட்டை வெகுவாக குறைத்து வருகிறது. ஏன் இப்படி….

என்ற கேள்வி எழுந்த போது, அதற்கான ஒரு சிறிய விளக்கத்தை மட்டுமே வங்கி கொடுத்துள்ளது. பிரித்தானியாவில் தற்போது ஏற்பட்டுள்ள வியாபார சிக்கல், பல மில்லியன் மக்கள் வேலையை இழந்து நிற்க்கும் இன் நிலையில். தமது வாடிக்கையாளர்கள் பெரும் தொகைப் பணத்தை கடனாகப் பெற்றால். அதனை மீள செலுத்த சிரமப்படுவார்கள் என்று தான், தாம் கிரெடிட் லிமிட்டை குறைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதனையே டெஸ்கோ வங்கி மற்றும் செயின்ஸ் பெரி வங்கிகளும் மேற்கொண்டு வருகிறது.

Contact Us