பிரித்தானிய பிரதமர் இந்தியா செல்ல மாட்டார் திட்டவட்டம்: எதிர்க்கட்சிகளின் தீவிர எதிர்ப்பு… சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஆலோசனை

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு வர திட்டமிட்டிருந்தார். ஆனால் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் 2ஆம் அலை வேகமாக பரவியதால் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து ஏப்ரல் 26ம் தேதி மீண்டும் இந்தியாவிற்கு வருவதாக திட்டமிட்டுள்ளார். அந்த பயணத்தில் டெல்லி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு தொழிலதிபர்களுடன் கலந்துரையாடலில் பங்கேற்கவும் பிரித்தானிய பிரதமர் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை மரபணு உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸின் 2ஆம் அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இந்த வைரஸ் பிரித்தானியாவிலும் பரவி வருகிறது. இதனால் இந்தியாவிலிருந்து வரும் அனைத்து விமான பயணங்களையும் ரத்து செய்து சிவப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்த ஆலோசனைகளை சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது ரத்து செய்ய வேண்டும் என பிரித்தானியாவின் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியினர் வலியுறுத்துகின்றனர். மேலும் அவர்கள் இந்தியாவிற்கு பயணிக்கக்கூடாது என்றும், ஜூம் வீடியோ கால் மூலம் அவரது வேலைகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து பொறிஸ் பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.

Contact Us