ஓட்டுநரில்லாமல் சென்ற கார் மரத்தில் மோதியதில் ஏற்பட்ட பெரும் விபரீதம்; உலகமே அதிர்ச்சியில்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆளில்லா டிரைவர் ரக டெஸ்லா கார் வேகமாக மரத்தின் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் இருந்த இரண்டு பேரும் பலியாகினர். கடந்த சனிக்கிழமை இரவு நடந்த இச்சம்பவத்தின் மேலதிக தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

2019ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட அந்த டெஸ்லா எஸ் ரக கார், ஸ்பிரிங் நகர சாலையின் வளைவில் மிக வேகமாக சென்றபோது தானியங்கியாக கட்டுப்பாட்டுக்கு வர இயலாமல் மரத்தில் மோதியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த 50 வயதுகளில் இருந்த முன் பக்கத்தில் அமர்ந்தவரும் பின் பக்கத்தில் அமர்ந்திருந்தவரும் பலியானார்கள்.

Contact Us