இலங்கையில் உயிருடன் உள்ளவரை பிரேத அறைக்கு அனுப்பிய மருத்துவர்; தற்போது பெரும் ஆப்பு!

இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருந்ததால் மயக்கமடைந்த நோயாளி இறந்து விட்டதாகத் தெரிவித்து அவரை பிரேத அறைக்கு அனுப்பிய மருத்துவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. நீர்கொழும்பு மருத்துவமனையின் மருத்துவரே தற்காலிகமாக புத்தளம் பொது மருத்துவமனைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவ சேவைகள் துணைப் பணிப்பாளர் லால் பனாபிட்டிய தெரிவித்தார்.

அத்துடன் சம்பவம் தொடர்பான விசாரணை முடியும் வரை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த சம்பவம் குறித்து நீர்கொழும்பு மருத்துவமனை நடத்திய விசாரணையின் அறிக்கை கடந்த வாரம் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த அறிக்கையின்படி, மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது அமைச்சின் பொறுப்பாகும் என்று நீர்கொழும்பு மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் நிர்மலா லோகநாதன் தெரிவித்தார்.

Contact Us