குப்பை எரிப்பது போல கூட்டம் கூட்டமாக உடல்களை எரிக்கும் இந்திய அதிகாரிகள் என்ன நடக்கிறது ?

இந்தியாவில் கொரோனா கட்டுக்கு அடங்காமல் செல்கிறது. அங்கே டபுள் மியூட்டன் என்று சொல்லப்படும் உருமாறிய மற்றும் இரட்டை பலம் கொண்ட புது கொரோனா தொற்றும் விடையம் சுகாதார அதிகாரிகளுக்கே தெரியாது. இன் நிலையில் இந்தியாவில் இருந்து லண்டன் வந்த நபர்கள் வைத்தியசாலையில் அனுமதியான பின்னர். லண்டன் மருத்துவர்கள் இதனை கண்டறிந்து இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்த பின்னரே இது தொடர்பாக அவர்கள் அறிந்துள்ளார்கள் என்றால், இந்தியா இந்த விடையத்தில் எந்த அளவு பின் தங்கியுள்ளது என்பதனை காட்டுகிறது.

இது இவ்வாறு இருக்க கட்டுக்கு அடங்காமல் பரவும் இந்த கொரோனாவால் ஒரு நாளைக்கு மட்டும் நூற்றுக் கணக்கான மக்கள் இந்தியாவில் இறந்து வருகிறார்கள். இவர்கள் வேறு யாரும் அல்ல ஏழைபாழைகள் தான்… குறித்த வைரஸ் தாக்கம் இருந்தும், 5 மாநிலங்களில் தேர்தலை நடத்திய மோடி அரசு குறித்து என்ன சொல்வது. நடந்து முடிந்த இந்த தேர்தல் ஊடாக மேலும் பல்லாயிரம் பேருக்கு கொரோனா தொற்றி இருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

உடல்களை தனி தனியாக எரிக்க முடியாமல் கூட்டு கூட்டாக சேர்ந்து எரித்து வருகிறார்கள் என்பது மிகவும் பரிதாபமான விடையம்.

Contact Us