துண்டு ஒரு தடவைதான் தவறும்.. விஜய்க்கு செஞ்ச தப்ப நானே சரி பண்றேன் என களமிறங்கிய இயக்குனர்

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் தளபதி 65 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியா நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ஆகா ஓகோ என்ற வரவேற்பை பெறவில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

அதுமட்டுமில்லாமல் விஜய்யின் கதாபாத்திரத்தை விட மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதனால் விஜய் தரப்பு கொஞ்சம் அப்செட்டில் உள்ளதாம்.

இதனை உணர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யின் தளபதி 66 படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் தன்னுடைய வட்டாரங்களில், மாஸ்டர் படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்களை மொத்தமாக தளபதி 66 படத்தின் மூலம் மாற்றி விஜய்க்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய வெற்றிப் படத்தைக் கொடுக்க முயற்சி செய்ய உள்ளேன் என குறிப்பிட்டுள்ளாராம்.

லோகேஷ் கனகராஜ் தற்போது கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் பாணியில் உருவாக உள்ளது. இதேபோல்தான் தளபதி 66 படத்தையும் பிளான் செய்துள்ளாராம் லோகேஷ் கனகராஜ்.

Contact Us