வயிறுமுட்ட தீவனம் தின்றும் முட்டையிடாத கோழிகள் பொலிசில் விவசாயியின் விசித்திர புகார்!

புனே லோனிகால்பர் தாலுகா ஆலந்தி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இதனால் கோழிகளுக்காக அருகில் உள்ள நிறுவனத்தில் இருந்து கோழித்தீவனம் வாங்கி வந்தார். பின்னர் அந்த தீவனத்தை கோழிகளுக்கு போட்டு வந்தார். ஒருவாரம் கடந்த நிலையில் வயிறுமுட்ட சாப்பிட்ட கோழிகள் முட்டை மட்டும் போடவில்லை.

இதனால் வேதனை அடைந்த கோழிப்பண்ணை உரிமையாளர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்து உள்ளார். இதற்கு சரிவர பதிலளிக்காததால் சம்பவம் குறித்து அவர் போலீசில் புகார் மனு அளித்தார்.

இந்த புகார் மனுவில், கோழித்தீவனத்தை தின்ற பின் எனது கோழிகள் முட்டையிடவில்லை எனவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

இந்த சம்பவம் சினிமாவில் நடிகர் வடிவேலு கிணறை காணவில்லை என காமெடி பண்ணுவது போல் இருந்தாலும் விவசாயி தனது வேதனையை நூதன முறையில் வெளிப்படுத்தியதை போலீசார் உணர்ந்தனர்.

இதனால் புகார் மீது வழக்குப்பதிவு செய்து கோழித்தீவன நிறுவனத்திடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Contact Us