அமெரிக்க கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் மரண வழக்கில் தீர்ப்பு… என்ன?

அமெரிக்காவில் காவல்துறை அதிகாரி ஒருவர் முழங்காலை வைத்து கழுத்தில் அழுத்தியதால் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்தார். இது உலகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, அமெரிக்காவிலும் போராட்டங்கள் தீவிரமாக நடந்தது. அதற்கிடையில் வெளியான ஜார்ஜ் பிளாய்டின் உடற்கூறு ஆய்வறிக்கையில், அவர் கழுத்துப் பகுதி மற்றும் முதுகுப்புறம் அழுத்தப்பட்டதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஜார்ஜ் பிளாய்டுக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் இருந்ததால், காவலர்களின் கொடூரமான நடவடிக்கையால் அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினரும் குற்றஞ்சாட்டி இருந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு அந்நாட்டின் hennepin county நீதிமன்றத்தில் நடந்தது. ஜார்ஜ் பிளாய்டின் கழுத்தில் டெரிக் சவின் என்ற காவலர் காலால் அழுத்தியதில் ஜார்ஜ் உயிரிழந்தார். இதனால் உலகம் முழுக்க நிறவெறிக்கு எதிரான போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் இந்த வழக்கில் 8 வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி பீட்டர் சஹில் தெரிவித்துள்ளார். 3 பிரிவுகளில் பதியப்பட்டுள்ள வழக்குகளில் டெரிக் சவினுக்கு 75 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Contact Us