இறுதியாக நீதி கிடைத்தது: 3 பிரிவில் குற்றவாளி என இனம்காணப்பட்டார் டெரிக் !

அமெரிக்காவில் மட்டும் அல்ல உலகளாவிய ரீதியில், அனைவராலும் எதிர்பார்கப்பட்ட வழக்கின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. ஜேர்ஜ் பிளையட் என்னும் அமெரிக்க கறுப்பின நபரை கைது செய்வது போல நடித்து. கால்களால் அழுத்திக் கொலை செய்துள்ளார் டெரிக் சுவைன். ஆனால் அவரை கடைசி வரை காப்பாற்ற பொலிஸ் பிரிவினர் பெரும் முயற்சிகளை எடுத்தார்கள். இறந்த ஜோர்ஜ் பிளையடின் சுவாசப் பையில், காரின் புகை காணப்படுவதாக கூறி. அவர் காரின் புகையை சுவாசித்தே உயிரிழந்தார் என்று கூட, பொலிஸ் தரப்பு சாட்சியங்களை முன் வைத்து வாதாடியது. ஆனால் ….

இறுதியாக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது ஜோ பைடன் ஆட்சியில். இதுவே ரம் ஆட்சியாக இருந்திருந்தால் இந்த வழக்கே மாறியிருக்கும் என்று தான் சொல்ல வேண்டும். 3 பிரிவின் கீழ் டெரின் சுவைன் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர் அதில் அனைத்திலும் குற்றவாளி என்று யூரிகள் சபை அறிவித்தது. இதனை அடுத்து நீதிமன்றில் வைத்தே அவரை காவலாளிகள் கைதுசெய்து அதி கூடிய பாதுகாப்பு உள்ள சிறைச்சாலையில் அடைத்துள்ளார்கள். அத்தோடு அவர் சிறையில் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்புகள் இருப்பதனால் , கண்காணிப்பில் இருக்கவும் உத்தரவு போடப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் சற்று முன்னர் அறிகிறது.

இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள அமெரிக்க அதிபர். ஜோர்ஜ் பிளையடுக்கு தான் மரியாதை செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளதோடு. சட்டத்தை எவரும் வளைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவின் ஒரு கறை படிந்த சம்பவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Contact Us