இலங்கையில் விடிய விடிய திறக்கப்படவுள்ள மதுக்கடைகள்? நாடே புள் மட்டையாகப்போகுது!

நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்ற நிலையில், ஒட்டுமொத்த இலங்கை மக்களின் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது ஒரு கருத்து.

அதாவது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த மதுபானக்கடைகளை அதிகாலை 1 மணிவரை திறக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்,நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் சுற்றுலாத்துறையையையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்காக இரவு நேர பொருளாதார முறையயை அறிமுகம் செய்யவேண்டும், இதற்கு ஹோட்டல் மற்றும் மதுபானக்கடைகளை திறக்கும் நேரம் நீடிக்க வேண்டும், மதுபானம் உரிமம் கொண்ட ஹோட்டல்களில் உள்ள மதுக்கடை வழக்கமாக இரவு 11 மணிக்கு மூடப்படும், அதனை அதிகாலை 1 மணிவரை திறக்க அனுமதிக்க வேண்டும், மது பரிமாறவும் அனுமதிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

Contact Us