நண்பர்களுக்கிடையிலான மோதல்: 8 நாள் கழித்து காத்திருந்த பெரும் பயங்கரம்!

சென்னை எண்ணூர் தாழாங்குப்பம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த செல்வகுமார், 24 வயதான இவர் தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் லோடு வேன் ஓட்டி வருகிறார். இந்நிலையில் காசிமேடு துறைமுக பொறுப்பு கழக வளாகத்துக்கு உள்ளே கடற்கரையோரத்தில் செல்வகுமார் சடலமாக புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் விசாரணையில் வெளியான தகவல்கள்:

எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் லோகேஷ் என்பவரின் சலூன் கடையில் கடந்த 14ஆம் தேதி குடிபோதையில் உள்ளே புகுந்த முத்தமிழ், முட்டை பானை என்ற தினேஷ், ஸ்ரீதர், நிஷாந்த், செல்வகுமார் ஆகிய 5 பேரும் சலூன் கடை ஊழியர் லோகேஷசை தாக்கி விட்டு தலைமறைவாக இருந்துள்ளனர். இதுதொடர்பாக எண்ணூர் காவல் நிலையத்தில் லோகேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அடிதடி வழக்கிற்காக 5 பேரையும் தேடி வந்துள்ளனர். ஆனால் இவர்கள் 5 பேரும் காசிமேடு துறைமுகம் அருகில் கடற்கரையில் தலைமறைவாகி மது அருந்தி வருவது தெரியவந்துள்ளது . மேலும் 16ஆம் தேதி செல்வகுமார் தனக்கும் அடிதடி வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை என்றும் இரு சக்கர வாகனம் மட்டும் தான் ஓட்டியது என்பதால் போலீசில் சரண் அடையப் போவதாக கூறியுள்ளார்.
.

ஆனால் தங்கள் 4 பேரையும் செல்வகுமார் காட்டிக் கொடுத்துவிடுவான் என்ற ஆத்திரத்தில் குடிபோதையில் இருந்த நான்கு பேரும் செல்வகுமாரை அருகில் இருந்த கட்டையை எடுத்து தலையில் அடித்து காயப்படுத்தி உள்ளனர். மேலும் மது பாட்டிலால் கழுத்தில் குத்தி கொலை செய்துவிட்டு கைகளை கட்டி ஒரு அடி ஆழத்துக்கு பள்ளம் எடுத்து கடற்கரையில் புதைத்துள்ளனர்.

இந்த நிலையில் எண்ணூர் காவல் நிலைய குற்ற வழக்கு சம்மந்தமாக 17.04.21-ம் தேதி ஜி.டி கோர்ட் XVவது நீதிமன்ற நடுவர் முன் சரணடைய சென்றபோது இந்த வழக்கு சரண் அடைய வேண்டியதில்லை என்று நடுவர் அவர்கள் திருப்பி அனுப்பி விட்டதால் மீண்டும் தலைமறைவாக இருந்து வந்தவர்கள்.

இதனிடையே செல்வகுமாரின் உறவினர்கள் தன் மகன் எங்கே இருக்கிறான் என்று நண்பர்கள் வீட்டில் சென்று கேட்டனர். இதனையடுத்து நான்கு பேரும் 8 நாள் கழித்து இன்று திருவொற்றியூர் நீதிமன்ற நடுவர் முன் 4 பேரும் எண்ணூர் அடிதடி வழக்கில் ஆஜராக சென்றனர் . அப்போது இவர்கள் மீது அடிதடி வழக்கு எதுவும் பதிவு செய்யாததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் செல்வகுமாரை கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து வண்ணாரப்பேட்டை மண்டல துணை ஆணையர் சுப்புலட்சுமி போலீசாருடன் துறைமுக பொறுப்பு கழக கடற்கரைக்கு சென்று அங்கு புதைக்கப்பட்டிருந்த செல்வகுமாரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றார்.
சலூன் கடை அடிதடி வழக்கில் நண்பர்களை காட்டிக்கொடுத்து விடுவான் என்ற சந்தேகத்தில் நண்பர்களே சக நண்பனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Contact Us