விடுதலைப்புலிகளின் அன்றைய கோட்டைக்குள் சற்றுமுன் நடந்த கொடூரம்!

கிளிநொச்சியில் இனம் தெரியாத நபர்களால் வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை முசுரம்பட்டி பகுதியிலேயே நேற்று இரவு வேளை இனந்தெரியாத இருவர் வீடு புகுந்து கணவன் மனைவி மீது சரமாரியான வாள்வெட்டு நடத்தி தப்பி சென்றுள்ளனர்.

காயமடைந்த இருவரும் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர் அழகேந்திரன் சுதாகரன் வயது 50 மற்றும் அவரது மனைவி சுதாகரன் விமலாதேவி வயது 44 எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை வாள்வெட்டு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us