பிக்பாஸ் வீடு இல்ல அது, மாமா வீடு.. பல ரகசியங்களை புட்டுப்புட்டு வைக்கும் விஜய் டிவி பிரபலம்

பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் பல்வேறு கலாச்சார சீர்கேடுகளை விஜய் டிவியில் பணியாற்றிய பிரபலம் ஒருவர் புட்டு புட்டு வைத்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த அளவுக்கு மோசமான வேலைகள் நடந்து வருகிறதாம்.

ஜூன் மாதம் வந்துவிட்டாலே விஜய் டிவியை கையில் பிடிக்க முடியாது. கமலஹாசனை ஜட்ஜாக வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விடுவார்கள். கவர்ச்சி கன்னிகள், சினிமாவில் சாதிக்க போராடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் என அனைவரையும் கலந்து கட்டி உள்ளே இறக்குவார்கள்.

அதில் சிலர் மக்களின் பேராதரவைப் பெற்று பின்னால் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் ஒரு சிலர் அதே மக்களின் வெறுப்பை பெற்று தடம் தெரியாமல் அழிந்து விடுவார்கள்.   அப்படி நல்லதையும் கெட்டதையும் கலந்து கொடுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வேறு சில மோசமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற இளம் பெண்கள் அனைவருமே புகை பிடிப்பது, தண்ணி அடிப்பது போன்ற பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்கிறார்களாம்.

அதுமட்டுமில்லாமல் ஆண் நண்பர்களுடன் கூத்தடிப்பது என்பது உள்ளே சாதாரண விஷயம் என குறிப்பிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இவை பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியில் வந்த ஒரு நடிகையை ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லும் வழியில் அவரிடம் ஓபன் ஆகவே கூறியிருந்தாராம்.

இது தெரியாமல் பல மக்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்து அதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இளம் நடிகைகள் பிக்பாஸ் வீட்டிற்குள் செய்யும் அட்டகாசங்களை தோலுரித்துக் காட்டியுள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இத்தனைக்கும் விஜய் டிவியில் ஒரு வார்த்தை ஒரு லட்சம் போன்ற சில நிகழ்ச்சிகளை இவர் தொகுத்தும் வழங்கியுள்ளார்.

Contact Us