என் காதலிய ரொம்ப மிஸ் பண்றேன்…! ‘எப்படி நாங்க ரெண்டு பேரும் மீட் பண்றது…? ‘போலீசாரிடம் கேட்ட இளைஞர்…’ – போலீசார் கொடுத்த ‘வேற லெவல்’ பதில்…!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருகிறது. அதிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் சூழல் கவலைக்குரியதாக உள்ளது. இதனால் மும்பை உட்பட சில நகரங்களில் எந்தவித தளர்வும் இல்லாத தீவிரமாக கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறது..

police answer to young man how to meet the girlfriend

இப்படி இருக்கும் சூழலில் “வெளியே சென்று என் காதலியை சந்திக்க நான் என்ன ஸ்டிக்கர் பயன்படுத்த வேண்டும்? நான் அவரை மிஸ் செய்கிறேன்” என ட்வீட் செய்து அதில் போலீசாரை டேக் செய்துள்ளார்.

இந்த கிண்டல் கேள்வியை கவனித்த போலீசார் அந்த இளைஞருக்கு பதில் அளித்தனர். அதில், “இது உங்களுக்கு ரொம்ப முக்கியமான தேவை என புரியுது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக உங்களது தேவை எங்களின் அவசர தேவை பட்டியலின் கீழ் இல்லையே.

PS : நீங்கள் இரண்டு பேரும் வாழ்நாள் முழுவதும் இணைந்திருக்க எங்களது வாழ்த்துகள். இந்த பிரிவு கொஞ்சம் நாளைக்கு தான்” என மும்பை போலீசார் அந்த இளைஞருக்கு பதில் கொடுத்துள்ளனர்.

police answer to young man how to meet the girlfriend

Contact Us