திண்ணையிலிருந்தவனுக்கு திடுக்கென வந்ததாம் கல்யாணம்; என்னடா நடந்தது!

வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இவர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ் குடவாலாவின் மகன் ஆவார். இவர், பழம்பெரும் நடிகர் கே.நட்ராஜ் மகள் ரஜினியை காதல் திருமணம் செய்தார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்கள்.

அதைத்தொடர்ந்து விஷ்ணு விஷாலுக்கும், பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஜோடியாக வெளியே சுற்றினார்கள். இவர்கள் இரண்டு பேரையும் திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர்கள், உறவினர்கள் கேட்டு கொண்டார்கள்.

அதைத்தொடர்ந்து விஷ்ணு விஷால்- ஜூவாலா கட்டா ஆகிய இருவரும் நேற்று திருமணம் செய்து கொண்டார்கள். ஐதாராபாத்தில் நேற்று மாலை 4 மணியளவில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

Contact Us