திடீரென நடந்த விவாகரத்து’… ‘இவரையா கல்யாணம் பண்ண போற’?… ‘நொறுங்கி போன கணவன்’… வீட்டுக்குள்ளேயே இருந்த காதலன்!

மனைவி தன்னை விவாகரத்து செய்ததை விட அவர் அடுத்ததாக யாரைத் திருமணம் செய்யப் போகிறார் என்பதை அறிந்த கணவன் அதிர்ந்து போனார்.

Woman Marries ex-Husband’s Stepdad Who is 30 Years Her Senior

அமெரிக்காவைச் சேர்ந்த 31 வயது பெண் எரிகா குயிகிள். இவர் தனது இளம்வயதில் ஜெப் என்பவரைச் சந்தித்தார். அப்போது அவருக்கு வயது 60. ஜெப்பின் வளர்ப்பு மகனான ஜஸ்டின் மீது காதல் வர அவரை எரிகா திருமணம் செய்து கொண்டார். இருவரின் திருமண வாழ்வு மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில் சில வருடங்களிலேயே எரிகாவுக்கு, ஜஸ்டின் மீதான காதல் கசந்தது.

Woman Marries ex-Husband’s Stepdad Who is 30 Years Her Senior

இதையடுத்து விவாகரத்து செய்யும் முடிவில் இருந்த எரிகா அதற்கான நடைமுறைகளில் இறங்கினார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் விவாகரத்து நடந்த நிலையில் எரிகா அடுத்த திருமணம் செய்யத் தயாரானார். ஆனால் எரிகா திருமணம் செய்ய போகும் நபரை அறிந்து தான் ஜஸ்டின் அதிர்ச்சியானார். அவர் வேறு யாரும் அல்ல, ஜஸ்டினின் வளர்ப்புத் தந்தையான ஜெப்.

Woman Marries ex-Husband’s Stepdad Who is 30 Years Her Senior

இதில் முக்கியமான சம்பவம் என்னவென்றால், எரிகாவுக்கும், ஜெப்புக்கும் ஏற்பட்ட காதலால் தான் எரிகா விவாகரத்து என்ற முடிவுக்கே வந்தார். இதையடுத்து தனது முன்னாள் மாமனாரான ஜெப்பை எரிகா திருமணம் செய்து கொண்டார். இதன்பின்னர் இந்த தம்பதிக்குக் குழந்தையும் பிறந்தது. இது குறித்து எரிகா கூறுகையில், ”எல்லாவற்றையும் மீறி எங்களின் உறவுமுறை சரியாக உள்ளது.

Woman Marries ex-Husband’s Stepdad Who is 30 Years Her Senior

எங்களுக்குள் எந்தவொரு வெறுப்பு உணர்வும் இல்லை. என் கணவருக்கும் எனக்குமான வயது வித்தியாசத்தை பெரியதாக நாங்கள் எடுத்துக் கொள்வதில்லை. சில விஷயங்களை உணர்ந்து கொள்வது கடினம். எங்கள் காதலும் அதே போன்று தான். ஆனால் இன்னொருவர் எங்கள் மீது கேள்வி எழுப்பும் அளவுக்கு எங்கள் காதல் இருக்காது” என எரிகா தெரிவித்துள்ளார். எரிகாவுக்கும் அவரது கணவரான ஜெப்க்கும் இடையே 30 வயது வித்தியாசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us