திடீர்னு எடப்பாடி வீட்டுக்கு போன ஓபிஎஸ்.. கையில் “3 ரிப்போர்ட்” இருந்ததாமே.. பரபர மேட்டர்கள்!

அதிமுகவின் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும்? ரிசல்ட்டுக்கு பிறகு ஏற்படும் நிகழ்வுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்த வாதங்கள் சோஷியல் மீடியாவில் ஏற்பட்டு வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை துணை முதல்வர் சந்தித்து பேசியது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது.

ரிசல்ட்டுக்கு தமிழகமே காத்துள்ளது.. இதில் திமுக வெற்றி வாகை சூடும் என்று கருத்துக்கணிப்புகள், கள நிலவரங்கள், ஆய்வுகள், வாக்குப்பதிவு ரிப்போர்ட்கள் போன்றவைகள் விலாவாரியாக எடுத்து சொல்லிவிட்டன.. ஆனால், அதிமுக மட்டும், தாங்களே வெற்றி பெறுவோம் என்று சொல்லி வருகிறார்கள்.. அதிலும் முதல்வருக்கு மட்டுமே இந்த அதீத நம்பிக்கை இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஆஸ்பத்திரியில் கடந்த 19ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டார்…. அங்கு அவருக்கு குடலிறக்க சிகிச்சை நடந்து முடிந்தது.. ஆபரேஷனுக்கு பிறகு, கடந்த 20ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்… அவரை வீட்டிலேயே 3 நாட்கள் ரெஸ்ட் எடுக்க டாக்டர்கள் அட்வைஸ் செய்திருந்தனர்.

அதன்படி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் ரெஸ்ட்டில் இருந்து வரும் முதல்வரை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று சந்தித்தார்… உடல் நலம் குறித்தும் விசாரித்தார்.. இதையடுதது, தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து இருவரும் விவாதித்ததாக சொல்லப்படுகிறது. அந்த சமயம், எடப்பாடியார் கையில் 3 விதமான ரிப்போர்ட்களை வைத்திருந்தார் என்றும் அதை வைத்து ஓபிஎஸ்ஸுடன் ஆலோசித்தார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

தேர்தல் தினத்தன்று எடுக்கப்பட்ட ரிப்போர்ட், மற்றும் மிக முக்கிய தொகுதிகளில் வாக்குகள் யாருக்கு டிரான்ஸ்பர் ஆகியிருக்கின்றன என்பது குறித்த 2 இரண்டு ரிப்போர்ட்கள் என மொத்தம் 3 விதமான ரிப்போர்ட்களை வைத்து இந்த ஆலோசனை நடந்ததாம். அதேபோல், ஓபிஎஸ்ஸும் கையில் ஒரு ரிப்போர்ட் வைத்திருந்தாராம்.

தென் மண்டல நிலவரங்கள், தனக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்து கிடைக்கப்பட்ட கணிப்புகள், ஆதரவாளர்கள் மூலம் திரட்டிய தகவல்கள் போன்றவைகள் அடங்கிய ரிப்போர்ட்களை வைத்திருந்தாராம்… இவைகளின் அடிப்படையில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து 2 பேரும் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டதாக சொல்கிறார்கள்!

வன்னியர் இடஒதுக்கீடு, சசிகலாவை கட்சியில் சேர்க்காதது, அமமுகவுடன் கூட்டணி வைக்காதது, தேமுதிகவை மிஸ் பண்ணியது போன்ற விவகாரங்களில் எடப்பாடியார் மீது ஓபிஎஸ்ஸுக்கு வருத்தம் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதுபோக தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் ஓபிஎஸ் பேசும்போது, இந்தத் தேர்தல் அதிமுகவுக்கு கஷ்டமான ரிசல்ட்டைதான் கொடுக்கும். நான் தேர்தலுக்கு முன்னாடி சொன்ன எதையுமே எடப்பாடி பழனிசாமி கேட்கலை.. எந்த தைரியத்தில் முதல்வர் இவ்வளவு நம்பிக்கையில் இருக்கிறார் என்று தெரியவில்லை” என்று சொல்லி வருகிறாராம்.

Contact Us