அதிகாலையில் ரிஷாட் மற்றும் சகோதரரை தூக்கிய கோத்தா அரசு; கண் கலங்கி சாரத்துடன் நிற்கும் ரிஷாட்; வீடியோ வெளியானது!

அகில இலங்கை முஸ்லிம் காங்ரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலையிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுதாரிகளுக்கு உதவியமை மற்றும் நெருங்கிய தொடர்பை பேணியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Contact Us