ரிஷாட்டின் கைதில் ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொடூர இராணுவ முகமாம்; சொன்னது யார் தெரியுமா?

அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனையும் அவரது சகோதரரையும் அதிகாலை 3 மணிக்கு வீடு புகுந்து கைது செய்தமையால் ராஜபக்ச அரசின் கொடூர ராணுவ முகம் வெளிப்படுகிறதா? என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

ரிஷாட் பதியுதீன் அதிகாலையில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

மேலும் தலைமறைவாக வாழும் பாதாள உலக கேடியை இழுத்து செல்வதை போல் கைது செய்ததன் பின்னுள்ள “ஆவேசம்” என்ன? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

Gallery

Contact Us