எம்ஜிஆரின் பிரமாண்ட வெற்றி படத்திற்கு தடை விதித்த கருணாநிதி.. ரிலீஸ் செய்தால் சேலை கட்டுகிறேன் எனக்கூறிய பிரபலம்

எம்ஜிஆர் இயக்கி அவர் நடிப்பில் மிக பிரமாண்டமாக வெளியான திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். ஆனால் இப்படம் வெளிவருவதற்கு பல தடங்கல்களை சந்தித்தது, அது என்னென்ன தடங்கல்கள் வந்தது என்பதை பார்ப்போம் .

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் 1973 ஆம் ஆண்டு பல சர்ச்சைகளை கடந்து வெளிவந்தது. இப்படம் தேவி பிரசாந்த் தியேட்டரில் இருந்து ஸ்பென்ஸர் வரைக்கும் மக்கள் கூட்டமாக இருந்து டிக்கெட் வாங்கி வரலாறு படைத்த படம். ஆனால் இப்படம் வெளியிடுவதற்கு அப்போது ஆளுங்கட்சியான DMK கருணாநிதி இருந்ததால் எம்ஜிஆரை பழி வாங்குவதற்காக படம் ரிலீஸ் ஆவதில் பல பிரச்சினைகளை கொடுத்துள்ளனர்.

எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் பல போராட்டத்திற்கு பின் வெளியான இப்படம் ரேடியோ, பத்திரிகை மற்றும் போஸ்டர் போன்ற எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் செய்ய வைத்தது அப்பொழுது ஆளுங்கட்சியான திமுக.  அப்புறம் திண்டுக்கல்லில் முதல் முதலில் ரிலீஸ் ஆனது, பின்பு சிவாஜிகணேசனின் சாந்தி தியேட்டரில் ரிலீசானது. மதுரையில் வசித்து வந்த கருணாநிதியின் மகன் மு.க.முத்து இந்த படம் ரிலீஸ் ஆகி விட்டாள் நான் சேலை கட்டுகிறேன் என கூறினார்.

பின்பு இப்படம் ரிலீஸான பிறகு எம்ஜிஆர் ரசிகர்கள் சேலை இங்கே மு.க.முத்து எங்கே.? என்று கிண்டல் செய்து வந்தனர். பல தடங்கலுக்கு பிறகு வெளியான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது.

Contact Us