கொரோனா தொற்றால் உயிரிழந்த 18 வயது யுவதி: பெரும் அதிர்சியில் இலங்கை !

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 638ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.நேற்று சனிக்கிழமை அறிக்கையின் பிரகாரம் நால்வர் கொரோனா தொற்றால் மரணித்துள்ளனர். அவர்களுள், வத்தளை பகுதியைச் சேர்ந்த 18 வயதான யுவதியொருவர், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

வத்தளையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அந்த யுவதி, கடந்த 21ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இதேவேளை, இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Contact Us