பகையை மறந்து றிஷாட்டுக்காக களமிறங்கிய மானங்கெட்ட சார்ள்ஸ்!

பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் சனிக்கிழமை (24) அதிகாலை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல உயிர்களை காவுகொண்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுதாரிகளுக்கு உதவியமை மற்றும் நெருங்கிய தொடர்பை பேணியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருக்கின்றார்.

இந்நிலையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர், சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பழிவாங்கும் முறையிலான கைதுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்தமை என்பது மிகவும் மோசமான செயல், அதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை போன்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Contact Us