தலைவர் பிரபாகரனை கொச்சைப்படுத்திய ரிஷாட்; இவனுக்குத்தான் தமிழர்கள் சப்போர்ட் பண்ணுறாங்க!

பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் சனிக்கிழமை (24) அதிகாலை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ளார்.

பல உயிர்களை காவுகொண்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுதாரிகளுக்கு உதவியமை மற்றும் நெருங்கிய தொடர்பை பேணியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

இதற்கமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் இருந்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவொன்று பெறப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.</p>
<p>இந்நிலையில் நேற்றையதினம் ரிஷாட்டை கைது செய்ய பௌத்தாலோக மாவத்தையிலுள்ள இல்லத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சென்றிருந்த நிலையில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற உரையாடல் தொடர்பான காணொளியொன்று நேற்று வெளியாகியிருந்தது.</p>
<p>அதில் பொலிஸ் அதிகாரி சொல்கிறார் உங்களுடன் தொடர்பை ஏற்படுத்த நேற்றிரவு முதல் முயற்சிக்கிறோம், அதற்கு ரிஷாட் சொல்கிறார் நான் பாராளுமன்றில் இருந்தேன் அல்லவா, எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனை கைது செய்ய வந்ததுபோல் வந்திருக்கிறீர்கள், ஏன் இவ்வளவு அவசரம் என்று தெரியவில்லை, வருமாறு கூறினால் நான் வருவேன் அல்லவா, கடந்த முறையும் வந்தேன் அல்லவா என, அதற்கு சேர் நிறுத்துங்கள் என பொலிஸார் சொல்கின்றனர் அத்தோடு முதல் காணொளி முடிந்தது.</p>
<p>அதன் பிறகு தனது அறைக்குள் சென்று அவசர அவசரமாக மற்றுமொரு காணொளியை கண் கலங்கியபடி ரிஷாட் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Contact Us