நயன்தாரா – விக்னேஷ் சிவன் கனவில் மண்ணை வாரிப்போட்ட கொரோனா… செம்ம அப்செட்டில் காதல் ஜோடி…!

கொரோனா 2வது அலை நயன்தாரா – விக்னேஷ் சிவன் முதன் முறையாக கண்ட கனவில் இப்படி மண்ணை வாரிப்போடும் என இருவரும் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்தியாவில் கொரோனா 2வது அலை ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக மக்கள் அதிகம் கூடுவதால் திரையரங்குகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் திரையுலகினர் பலரும் மீண்டும் ஓடிடி பக்கம் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை விஜய் சேதுபதி நடிப்பில் உருவான பல படங்கள் ஓடிடியில் வெளியாக தயாராக உள்ளது. தற்போது அந்த வரிசையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடியும் இணைந்துள்ளனர். ஆம், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நயன்தாரா கண்பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ள இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விக்னேஷ் சிவன் முதன் முறையாக இந்த படத்தை தயாரித்துள்ளார். நடிப்பு, இயக்கம் ஆகியவற்றை கடந்து காதல் ஜோடி இருவரும் தங்களுடைய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலமாக தயாரிப்பு, விநியோகம் ஆகிய பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தங்களுடைய தயாரிப்பு நிறுவனம் தயாரித்த முதல் படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டி நிலை வந்துவிட்டதே என்பதை எண்ணி நயன் – விக்கி இருவரும் செம்ம அப்செட்டில் உள்ளதாக செய்தி.

Contact Us