மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்; உருக்கமான கடிதம் சிக்கியதால் பரபரப்பு!

காதலனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியதால், இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில்குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் பிராட்வின் மிபியா (வயது 21). நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி மாணவியாக மிபியா பணியாற்றினார்.

இந்தநிலையில் மிபியா, ஒருவரை காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று தன்னுடைய காதலனை, வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய போவதாக காதலனிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காதலன், செய்வதறியாமல் திகைத்தார். அதே சமயத்தில் வீடியோ காலில் பேசிக்கொண்டே மிபியா தூக்கு கயிறை மாட்டியதாகவும் தெரிகிறது.

பதறிபோன காதலன், அவருடைய நண்பரை தொடர்பு கொண்டு மிபியாவை எப்படியாவது காப்பாற்றும்படி கதறி அழுதுள்ளார். ஆனால் மிபியாவை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.

தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் பிரச்சினை காரணமாக மிபியா தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் சாவதற்கு முன்பு மிபியா எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மிபியா கூறியிருப்பதாவது:-

என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க, நான் காதலுக்கு தகுதியானவள் கிடையாது. மன்னிச்சிடு பாப்பு, மன்னிச்சிடுங்கள் அப்பா, அம்மா, தம்பி ஜெதீஸ் என எழுதப்பட்டிருந்தது.

நர்சிங் மாணவி சாவதற்கு முன்பு எழுதிய கடிதத்தால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கடிதம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Contact Us