கிரிக்கெட்டால் 22 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை அடுத்த நீருகுட்டவாரிப்பள்ளியில் உள்ள ஒரு டீக்கடையில் வாலிபர்கள் பலர் செல்போனில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதியினர் மதனப்பள்ளி 2-டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் நரசிம்மலு தலைமையில் போலீசார் விரைந்து வந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரத்து 380, 15 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Contact Us