காதல் தோல்வியாம்!! யாழ் நாவற்குழிப் பாலத்திலிருந்து குதிக்க முற்பட்ட யுவதி!!

யாழ்.நாவற்குழி பாலத்திலிருந்து பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண் பொதுமக்களால், காப்பாற்றப்பட்டார் என அதிர்வு இணையம் அறிகிறது. யாழ்.சாவகச்சோி – நாவற்குழி பாலத்திற்குள் பாய்ந்து இளம் பெண் ஒருவர் தற்கொலை முயற்சி செய்த நிலையில் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று 1.15 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த பெண் நாவற்குழி பாலத்திலிருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற நிலையில் அப்பகுதியால் சென்ற பொதுமக்கள் குறித்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர். குறித்த பெண் யாழ்.ஸ்ரான்லி வீதியை சேர்ந்தவர் எனவும் காதல் தோல்வியின் காரணமாகவே தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

Contact Us