சந்தேகப்படும் நபர்களை கண்காணிக்க சார்ஜாவில், புதுவித அதிரடி முயற்சி!

ஆளில்லா குட்டி விமானம்
சார்ஜாவில் பொது இடங்களில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களை மற்றும் தேடப்படும் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு உதவியாக நவீன ஆளில்லா குட்டி விமானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆளில்லா குட்டிவிமானம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது ஆகும்.

முக அடையாளத்தை வைத்து கண்டு உணரும் தொழில்நுட்பம் உள்ளதால் எளிதில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விட முடியும். குறிப்பாக பொது இடங்களில் அல்லது மக்கள் கூட்டமாக உலாவும் பகுதிகளில் இந்த ஆளில்லா குட்டி விமானம் துல்லியமாக சந்தேகப்படும் நபர்களை கண்டுபிடித்து விடுகிறது.

புகைப்படம் மூலம் அடையாளம்
தேடப்படும் குற்றவாளிகளின் அல்லது சந்தேகப்படும் நபர்களின் புகைப்படத்தை பதிவு செய்து கொண்டால் போதும். எளிதில் அதுபோன்ற நபர்களின் நடமாட்டத்தை இந்த விமானம் அடையாளம் காட்டி விடுகிறது. இதற்காக அகச்சிவப்பு கதிர்கள் (இன்பெரா ரெட்) உதவியால் செயல்படும் உயர்தர கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் குற்றவாளிகள் மட்டுமல்லாமல் சாலையில் தாறுமாறாக வாகனங்களை ஓட்டி செல்வோர், போக்குவரத்து விதிமீறல்களை செய்வோரை கண்டுபிடிப்பது, விபத்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது என அனைத்து வகையிலான பணிகளிலும் இந்த குட்டி விமானம் செயல்படும். குறிப்பாக கொரோனா தடுப்பு விதிமீறல்களும் இதில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் தகவல்கள் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Contact Us