6 மாதங்களாக மிரட்டி பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2 பேர்!

திருவனந்தபுரம் அருகே உள்ள முல்லநல்லூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். மேலும் மனநலமும் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இதுகுறித்து அவரது பெற்றோர் விசாரித்த போது, மாணவி சரியாக பதில் அளிக்கவில்லை.

இதனால் மாணவியின் பெற்றோர் திருவனந்தபுரம் சைல்டு ஹெல்ப் லைன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். அவர்கள் மாணவியை அழைத்து கவுன்சிலிங் வழங்கி விசாரித்தனர். அதில் மாணவியை கடந்த 6 மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த 2 பேர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது அதே பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைசேர்ந்த சமீர் (வயது 32) மற்றும் சபருல்லா (44) என்பது தெரி வந்தது.

இவர்கள் இருவரும் சிறுமியிடம் மிகவும் அன்பாக பேசி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அதை வீடியோ எடுத்து வெளியே சொன்னால் ஆன்-லைனில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி தொடர்ந்து 6 மாதங்களாக பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவனந்தபுரம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மாணவி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Contact Us