லண்டனில் லாக் டவுனை தளர்த்தியும் கொரோனா பரவவில்லை: இறக்கும் எண்ணிக்கையும் பெரும் வீழ்ச்சி !

பிரித்தானியாவில் ஏப்பிரல் 12ம் திகதி முதல் பல வியாபார ஸ்தலங்களை திறக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கொரோனா தொற்றின் 3ம் அலை அடிக்கும் என்றும். அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அரசாங்கம் கருத்தியது. இதன் காரணத்தால் சுகாதார சேவை திணைக்களமும், ஆயத்தமாக இருந்து வந்தது. ஆனால் யாரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில், லாக் டவுனை தளர்த்தியும் கூட, கொரோன பரல் கூடவில்லை. மாறாக குறைவடைய ஆரம்பித்துள்ளது… இதனால்…

பிரித்தானிய அரசு பெரும் வெற்றி கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. பிரித்தானியாவின் மொத்த சனத் தொகையில் பாதிப் பேருக்கு மேலாக தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ள நிலையில். தற்போது பிரித்தானியாவில் 42 வயதுக்கும் குறைந்த நபர்களுக்கு ஊசிகளை போட ஆரம்பித்துள்ளார்கள். இதனால் தற்போது இளையோர்களுக்கும் ஊசிகள் கிடைக்க உள்ளது. பிரித்தானியாவை பொறுத்தவரை தற்போது கொரொனாவை அவர்கள் வென்றுவிட்டார்கள் என்று தான் கூறவேண்டும்.

Contact Us