100 மைல்கள் நடந்து விட்டார்கள் இன்றோடு 4வது நாள்: வேல்ஸ்சில் இருந்து வெஸ்மினிஸ்டர் வரை #W2W

வேல்ஸ் நகரில் இருந்து, லண்டன் வெஸ்மினிஸ்டர் வரையான நடை பயணம் இன்றோடு 4வது நாளை எட்டியுள்ள நிலையில். சுமார் 100 மைல் தூரத்தை பொடி நடையாக நடந்து கடந்துள்ளார்கள் நாடு கடந்த அரசின் உறுப்பினர்கள். பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளின் தடையை நீக்கக் கோரி, உங்கள் தொகுதி MPக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் படி அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தயவு செய்து தமிழர்களே உங்கள் ஆதரவைக் கொடுங்கள்…. அவர்கள்…

இத்தனை நூறு மைல்கள் நடப்பது எம் இனத்திற்காக தான். தற்போது 4 நாட்களாக, கடும் குளிர் மற்றும் மழை என்று கூட பாராமல் அவர்கள் நடந்து லண்டன் நோக்கி வந்து கொண்டு இருப்பது. தமிழர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனூடாக பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க. மேலும் சொல்லப் போனால் வேல்ஸ் மற்றும் லண்டனுக்கு இடையே உள்ள பல பட்டி தொட்டிக் கிராமங்களை எல்லாம் கடந்து வரும் அவர்கள், அந்த ஊரில் வசிக்கும் வெள்ளை இன மக்களுக்கும், தமிழர்கள் தொடர்பான தகவலை பரப்பி வருகிறார்கள்.

தமிழர்களே நாம் உடனடியாக களத்தில் இறங்கி எமது முழு ஆதரவை தெரிவிக்க வேண்டும். இதனை கூட நாம் செய்யவில்லை என்றால்….

Contact Us