அடுத்தடுத்து கிளம்பும் ‘வெளிநாட்டு’ வீரர்கள்.. “ஆனா என்ன வந்தாலும் சரி, நான் சொந்த ஊர் போகப் போறதில்ல..” ‘மும்பை’ வீரர் சொல்லும் ‘காரணம்’!!

கொரோனா தொற்றின் காரணமாக, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற்றிருந்தது.

coulter nile says surprise to see australian players go home

இதனைத் தொடர்ந்து, இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர், இந்தியாவில் வைத்து நடைபெற்று வரும் நிலையில், உருமாறிய கொரோனா தொற்றின் இரண்டாம் அலை, இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மற்ற உலக நாடுகளில் இல்லாத அளவுக்கு, இந்த கொடிய தொற்றின் தாக்கம், இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, பல நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை துண்டித்துள்ளது. இனிவரும் நாட்களில், இன்னும் அதிக பாதிப்பு உருவாகலாம் என்றும் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படி ஒரு மோசமான சூழ்நிலையின் போது ஐபிஎல் போட்டிகள் தேவை தானா என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்றின் காரணமாக, ஐபிஎல் போட்டிகளில் பங்குபெறும் வீரர்கள், ‘பயோ பபுள்’ என்னும் பாதுகாப்பு வளையத்தின் மூலம் தான் ஐபிஎல் தொடரில் பங்குபெற்று வருகின்றனர். போட்டி முடிந்தால் ஓட்டல் மட்டும் தான் செல்ல வேண்டும். வெளியே சுற்ற ஒன்றும் அனுமதி இல்லை.

இந்த பயோ பபுள் காரணமாக, கடந்த நாட்களில் வெளிநாட்டு வீரர்கள் சிலர், ஐபிஎல் தொடரில் இருந்து விலகி வருகின்றனர். ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ டை (Andrew Tye), ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அதே போல, இந்திய வீரர் அஸ்வினும், கொரோனா தொற்றின் காரணமாக தனது குடும்பத்தினருடன் இருக்க வேண்டும் என்பதற்காக, நேற்று பாதியிலேயே விலகினார்.

இதனைத் தொடர்ந்து, பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் கேன் ரிச்சர்ட்சன் (Kane Richardson) மற்றும் ஆடம் ஸம்பா (Adam Zampa) ஆகியோர், தனிப்பட்ட காரணங்களுக்காக சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதால் தான், ஒவ்வொரு வீரர்களாக தொடரில் இருந்து விலகுகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் நாதன் கவுல்டர்-நைல் (Nathan Coulter-Nile), ‘ஆண்ட்ரூ டை, ஆடம் ஸம்பா, ரிச்சர்ட்சன் ஆகியோர் அடுத்தடுத்து ஐபிஎல் தொடரில் இருந்து விலகி, நாடு திரும்பியதை பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அவர்களிடம் இதுபற்றி பேசிய போது தான், ஏன் அவர்கள் விலகினார்கள் என்பதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

ஆடம் ஸம்பாவிடம் நான் பேசும் போது, அவர் நாடு திரும்புவதற்கான தகுந்த காரணத்தை என்னிடம் கூறினார். ஆனால், என்னைப் பொறுத்தவரையில், இப்படியான ஒரு சூழ்நிலையில், சொந்த நாடு செல்வதை விட, பயோ – பபுளில் இருப்பதைத் தான், நான் சிறந்ததாக கருதுகிறேன். இங்குள்ள நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது’ என நாதன் கவுல்டர்-நைல் தெரிவித்துள்ளார்.

Contact Us