மீன் மாதிரி தெரியல, ரொம்ப வெயிட்டா இருக்கு…! ‘வலையில இப்படி ஒண்ணு சிக்கும்னு யாருமே எதிர்பார்க்கல…’ – மீன்பிடிக்க வலையை விரித்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

இலங்கையில் மீன் பிடிப்பதற்காக வலையை விரித்தபோது மீனுக்கு பதிலாக அவர்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் கிடைத்த ஒன்று அனைவரையும் வியப்புக்குள் ஆக்கியுள்ளது.

Sri Lanka Kiribawa baby Elephant caught in a fish net

இலங்கை குருநாகல் மாவட்டம் கிரிபாவ பகுதியில், குளத்தில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அவர்கள் வழக்கமாக வலை வீசும் பகுதிக்கு சென்று வலையை விரித்துள்ளனர்.

அப்போது மீன்கள் எதுவும் சிக்காமல் இருந்துள்ளது. திடீரென வலையில் மிகவும் கனமான உயிரினம் மாட்டுவதை உணர்ந்தனர். மிகவும் கனமாக இருந்ததால் ரெண்டு மூன்று பேர் சேர்ந்து வலையை கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது தான் விரிக்கப்பட்டிருந்த வலையில், நான்கு மாத யானைக்குட்டி ஒன்று இருந்தது தெரியவந்தது.

மேலும், அந்த யானைக் குட்டி உயிருடன் இருப்பதைக் கண்டு, அங்கிருந்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள், யானைக் குட்டியை நல்லபடியாக மீட்டு எடுத்து, நிகாவெரெட்டிய கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கிருந்து, உடவல யானைகள் சரணாலயத்திற்கு யானைக்குட்டி சேர்க்கப்பட்டு அங்கு முறையாக பராமரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Contact Us