இலங்கைக்கு படை எடுத்த இந்திய செல்வந்தர்கள்- கூடவே கொரோனாவையும் கொண்டு சென்றார்கள் ?

இந்தியாவில் இருந்து தனி விமானம் மூலம் பல செல்வந்தர்கள், அண்டை நாடான இலங்கை சென்ற வண்ணம் உள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. 8 பேர் மற்றும் 12 பேர் பயணிக்க வல்ல ஜெட் விமானங்களை வாடகைக்கு எடுத்து. இலங்கை அரசின் அனுமதியோடு கட்டநாயக்க விமான நிலையத்தில் இவர்கள் இறங்கி கொழும்புல் உள்ள ஆடம்பர ஹோட்டல்களில் ரூம் போட்டு உள்ளார்கள். இவர்கள் இலங்கை அரசுக்கு ரொக்கமாக ஒரு பணத்தை கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது, ஆனல் இன் நிலையில்…

இவர்கள் இந்தியாவில் இருந்து கொழும்பு வந்தவேளை, கூடவே இந்தியாவை தாக்கும் 3 முறை உருமாற்றம் பெற்ற மிகவும் வலிமை மிக்க கொரோனா வைரசையும் இலங்கைக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள் என்ற தகவல் பரவி வருகிறது. இது இவ்வாறு இருக்க, இலங்கையில் பரவும் கொரோனா இந்தியாவில் கண்டறியப்பட்ட மாறுபாடுடைய வைரஸ் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை இயக்குநர் வைத்தியர் சந்திமா ஜீவந்தரா தெரிவித்தார். இருப்பினும் இதனை சரியாக உறுதி செய்ய முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளதோடு…

மேலும் ஒரு வாரம் கழித்து நடத்தப்படும் ஆய்வில் தான் இதனை சரியாக கண்டறிய முடியும் என்கிறார்.

Contact Us