தென்கொரியாவில் சாக்லேட், தொப்பி திருடி மாட்டிக்கொண்ட பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த இருவர்கள்!

தென்கொரியாவில் பாகிஸ்தானுக்கான தூதரகம் சியோல் நகரில் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதி பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த இருவர் சியோல் நகரில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர். அப்போது 1.7 அமெரிக்க டாலர் மதிப்புள்ள சாக்லேட்டுகளை திருடியுள்ளார்.

இதுகுறித்து கடை உரிமையாளர் போலீசில் புகார் செய்ய, போலீஸ் அதிகாரிகள் சிசிடிவி காட்சியை பரிசோதிக்கும்போது, அவர்கள் பாகிஸ்தானை தூதரகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

அதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி 10 அமெரிக்க டாலர் மதிப்பிலான தொப்பியை திருடியதாக மற்றொருவர் மாட்டியுள்ளனர். தொப்பி திருடிய விவகாரத்தில் தூதரகம் தொடர்பான நபர் என்பதால் போலீசார் வழக்கை முடித்து வைத்துள்ளனர். ஆனால் சாக்லேட்டுகள் திருடிய விவகாரத்தில் இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Contact Us