கொழும்பில் ஓடும் பேருந்தில் நடந்த பெரும் அதிர்ச்சி; பயணிக்கு காத்திருந்த சோகம்!

கொழும்பு, புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணிக்கும் பேருந்து ஒன்றில் பயணித்த யுவதி ஒருவரின் நகை திருடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில் அருகில் இருந்த நபர் அருந்துவதற்கு பானம் ஒன்றை தந்ததாகவும் அதன்பின் தம்புத்தேகம பகுதியில் வைத்தே கண் விழித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கண் விழித்து பார்த்த சந்தர்ப்பத்தில் தன்னிடம் இருந்த நகை மற்றும் பணம் திருடப்பட்டிருந்ததாகவும் குறித்த யுவதி முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்போது 168,000 ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு திருடியதாக கூறப்படும் நபர் வரகாபொல பகுதியில் வைத்து பேருந்தில் இருந்து இறங்கிவிட்டதாக பேருந்து நடத்துனர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us