லண்டனில் தற்போது 40 மில்லியன் மக்கள் கோவிட் FREE ஏரியாவில் வசிக்கிறார்கள்-

பிரித்தானியாவில் தற்போது 40 மில்லியன் மக்கள், கோவிட் இல்லாத நகரங்களில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் பல நகரங்கள் தற்போது பச்சை நிறத்திற்கு மாறியுள்ளது. முன்னர் மஞ்சல் மற்றும் சிவப்பு நிறங்களில் அதி அபாயகரமான நகரங்களாக இருந்த பல இடங்கள். தற்போது கொரோனா தொற்று இல்லாத நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இது இவ்வாறு இருக்க.. துருக்கி அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்து சர்சையைக் கிளப்பி உள்ளது…

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்ற பிரித்தானியாவால், 60 மில்லியன் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் 20 மில்லியன் ஊசிகளை கூட பெற்றுக் கொள்ள முடியவில்லை. பிரித்தானியா கொரோனாவில் இருந்து விடுபட்டு விட்டது. அவர்கள் நாட்டு நாணயம் மேல் நோக்கிச் செல்ல ஆரம்பித்து விட்டது. ஆனால் யூரோ பலத்த அடி வாங்கும் நிலையில் உள்ளது என்று துருக்கி அமைச்சர் ஒருவர் சர்சையான கருத்தை வெளியிட்டுள்ளார்.

Contact Us