இலங்கையில் சிறைச்சாலைக்குள் பரபரப்பு; என்ன வீசியுள்ளார்கள் பாருங்கள்!

களுத்துறை சிறைச்சாலையின் பீ பிரிவிற்குள் நேற்று (27) பிற்பகல் 2.30 மணிக்கு வீசப்பட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளடங்கிய பொதி ஒன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பொதியில் இருந்து ஹெரோயின் என சந்தேகிக்கும் 158 பெக்கெட்டுக்கள், கஞ்சா 20 கிராம், கையடக்க தொலைபேசி 2 மற்றும் 30 போதை மாத்திரைகளை சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை இன்று (28) காலையிலும் குறித்த பகுதியின் கூரைக்கு மேலால் வீசப்பட்ட பொதி ஒன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பொதியில் இருந்து 6 தொலைபேசிகள், புகையிலை 10 மற்றும் 2 சார்ஜர்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Contact Us