சீமானைப் போல நான் எங்கும் ஓடவில்லை- ஆமைக் கறி என்பது எல்லாமே பொய்- அனந்தி !

 

சமீபத்தில் சீமான், பொட்டு அம்மானை கேவலப்படுத்தி பேசிய ஒலி நாடா வெளியானது. அதனை அனந்தி நாகரீமான முறையில் கண்டித்து இருந்தார். ஆனால் உடனே சீமானின் தம்பிகள், அவரை ஒரு வே****ச என்ற வார்த்தைகள் எல்லாம் பயன்படுத்தி, இணையத்தில் திட்டி தீர்த்தார்கள். இத்தனைக்கும் சீமான் வாயே திறக்கவில்லை. சென்னையில் சிங்களவர்கள் அச்சுறுத்தல் எதுவும் இன்றி அரசியல் செய்யும், சீமானையும். ஈழத்தில் இலங்கை அரசின் கெடு பிடிகளுக்கு மத்தியில் நின்று ஒரு பெண்ணாக இருந்தும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் அனந்தி பற்றி பேச சீமானின் தம்பிகளுக்கு எந்த ஒரு ஜோக்கியதையும் இல்லை என்று தான் கூறவேண்டும். Video கீழே …

அனந்தி தனது குடும்பத்தில் 2 பேரை மாவீரராக கொடுத்தவர். மேலும் சொல்லப்போனால் தனது கணவரையும் இலங்கை ராணுவத்திடம் இழந்து நிற்க்கும் ஒரு பெண். ஆனால் அதனைக் கூட பாராமல் இன்று கூட சில புலம்பெயர் ஈழத் தமிழர்கள் சீமான் செய்வது சரி என்று கருதுவது, வரலாற்றுத் தவறு ஆகும். முதலில் சீமான் அவர்கள் அனந்தியிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கொரவேண்டும். இவ்வாறு அவரது தம்பிகள் பேசிய விடையம் பிழையானது என்று அவர், ஒரு கட்டத்திலாவது சொல்லி இருக்க வேண்டும். அதனையும் அவர் சொல்லவில்லை.

இன் நிலையில் காட்டமான பதில்களை வழங்கி ஒரு செவ்வியைக் கொடுத்துள்ளார் அனந்தி சசிதரன்.

Contact Us