குடும்ப தகறாறு- மோபைல் போனில் படம் எடுத்த சிறுவன் கன்னத்தில் அடித்த நபரை அந்தச் சிறுவனே கொலை செய்தான் !

மட்டக்களப்பு நகர் பகுதியில் குடும்ப உறவினரின் குடும்ப பிரச்சினையை தீர்ப்பதற்கு சென்றவரை, 15 வயதுச் சிறுவன் அடித்தே கொலை செய்த விடையம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குடும்ப பிரச்சனையை தீர்க்கச் சென்ற நபர் முன் நாள் பொலிஸ் அதிகாரி என்பது அதனை மிஞ்சிய அதிர்ச்சி ஆகும்.

மட்டக்களப்பு இரண்டாம் குறுக்கு வீதியிலுள்ள தனது சகோதரியின் மகளின் குடும்ப பிரச்சனையை தீர்க்க சென்றுள்ளார் 56 வயதாகும் மனோகர ராஜா. அவர் குடும்பப் பிரச்சனையை தீர்க்க, கணவன் மனைவியோடு பேசிக் கொண்டு இருக்கும் வேளையில். அதனை வீடியோ எடுத்துள்ளான் குறித்த 15 வயதுச் சிறுவன். இதனை தற்செயலாக பார்த்த மனோகர ராஜா, அவன் கன்னத்தில் ஓங்கி அறை ஒன்றை விட்டு. கையில் உள்ள மோபைல் போனைப் பறித்துள்ளார். இதனை அடுத்து ஆவேசமடைந்த சிறுவன், சற்றும் எதிர்பாரா வண்ணம் அவரை சரமாரியாக தாக்கியுள்ளான்.

இது போக அச் சிறுவனின் அப்பா(அந்த கணவர்) இணைந்து மனோகர ராஜாவை தாக்கிய நிலையில். ஊர் மக்கள் கூடி விலக்கு பிடித்துள்ளார்கள். இவர்கள் இருவரையும் தள்ளி விட்டு மனோகர ராஜாவைப் பார்த்தவேளை அவர் மூச்சு முட்டி இறந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து 15 வயது சிறுவன், மற்றும் அவரது அப்பா ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில். இருவரையும் 7ம் திகதிவரை தடுப்பு காவலில் வைத்திருக்குமாறும். சிறுவனை சிறுவர் சீர்திருத்த சிறைச்சாலையில் வைக்குமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

Contact Us