கொரோனா என்னும் பேயை ஓட்டும் புது மந்திரவாதிகள் முளைத்துள்ளார்கள்- பரிதாபங்கள் !

இந்தியாவில் கொரோனா வைரஸ் எல்லை மீறி பரவிவரும் நிலையில். குக் கிராமங்கள் மற்றும் சிறிய ஊர்களில் வசிக்கும் நபர்கள், கொரோனா என்பது ஒரு வகையான கெட்ட ஆவி என நம்புகிறார்கள். இந்தியாவில் ஏற்கனவே வேர் ஊன்றியுள்ள மூட நம்பிக்கை ஒரு புறம் இருக்க. இந்த கொரோனா வைரசை பாவித்து காசு சம்பாதிக்க, ஒரு கூட்டம் அலைகிறது. இவர்கள் கொரோனா என்ற கெட்ட ஆவியை விரட்டுவதாக கூறி, நோயாளிகளை அழைத்து மந்திரம் சொல்லி காசு வாங்கி பின்னர் வீட்டுக்கு அனுப்பி வருகிறார்கள்.

இதனால் பலர் தற்போது மாந்திரவாதிகள், மாந்திரீகம் செய்யும் நபர்களை அணுகி கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதாக எண்ணி ஏமாந்து வருகிறார்கள். இந்த அறியாமையை என்ன வென்று சொல்ல? எப்பொழுது தான் இந்தியா திருந்தும் ?

Contact Us