நேற்று சீனா.. இன்று இந்தியா.. இரண்டு மனைவிகளைப்போல் கையாளும் மஹிந்த குடும்பம்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவை இன்று முற்பகல் அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயத்தை நிறைவு செய்த பின்னர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவை அவசரமாக சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த 27ஆம் திகதி இரவு அவர் இலங்கையை வந்தடைந்தார். இதனையடுத்து அவர் நேற்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Contact Us