தமிழகத்தில் தி.மு.க பெரும் வெற்றி- கசியும் தேர்தலுக்கான பிந்திய கணக்கெடுப்பு !

ஒன்று அல்ல இரண்டு அல்ல, 5 பெரும் ஜாம்பவான் நிறுவனங்கள் தேர்தலுக்குப் பின், நீங்கள் யாருக்கு வாக்குப் போட்டீர்கள் என்று லட்சக் கணக்கான மக்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு, நடத்திய கருத்துக் கணிப்பு இவையாகும். இவை அனைத்துமே ஒரே மாதிரியாக இருக்கிறது.

நடந்து முடிந்த தமிழக தேர்தலின் முடிவுகள் மே மாதம் 2ம் திகதி தொடக்கம் 5ம் திகதியில் வெளியாக உள்ள நிலையில். தேர்தலுக்கான பின்னர் நடந்த கருத்துக் கணிப்பை 29ம் திகதிவரை வெளியிட வேண்டாம் என தேர்தல் ஆணையம் கட்டளை பிறப்பித்து இருந்தது. அதன் அடிப்படையில் இது நாள் வரை அந்த அறிக்கைகள் வெளியாகவில்லை. சற்று முன்னரே இந்த அறிக்கைகள் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் தி.மு.க 175 தொடக்கம் 195 ஆசனங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது… 2ம் இடத்தில் அதிமுகவும்…

3ம் இடத்தில் அமமுக கட்சியும், 4ம் இடத்தில் கமல் ஹசனின் மக்கள் நீதி மையமும் உள்ளது. இதில் உணர்வாளர் சீமானின் கட்சிக்கு எந்த ஒரு ஆசனமும் கிடைக்கப் போவது இல்லை என்று இந்த 2 கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன. இது தமிழ் தேசியத்திற்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள். இந்த கருத்துக் கணிப்பு பல புலம் பெயர் தமிழர்களை அதிருப்த்திக்கு உள்ளாக்கியுள்ளது. ஈழத்தில் தன் இன விடுதலைக்காக போராடி, கால் கைகளை இழந்து தற்போதும் தவித்து வரும் முன் நாள் போராளிகளுக்கு கூட பணத்தை கொடுத்து உதவாமல்.

அண்ணன் சீமான் அவர்கள் தேர்தலில் வெல்லவேண்டும் என்று பல தமிழர்கள் நன்கொடைகளை கொடுத்துள்ள நிலையில். இது போன்ற கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளமை உலக தமிழர்களுக்கு நல்ல செய்தியாக அமையவில்லை  என்று பலர் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

Contact Us