இது யாரு பார்த்த வேலைன்னே தெரியல…’ ரிசல்ட் வர்றதுக்கு முன்னாடி ‘இப்படி’ ஒரு பேனர்…! விளக்கம் அளித்த வேட்பாளர்…!

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2 ஞாயிற்றுகிழமை அன்று எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

ADMK candidate banner of victory before the vote count

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் வெள்ளக்கோவில் சாமிநாதனும், அதிமுக சார்பில் ஏ.எஸ்.ராமலிங்கமும் போட்டியிட்டனர்.இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே, அதிமுக வேட்பாளர் ராமலிங்கம்,13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும், எனவே தனக்கு ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பழையக்கோட்டைபுதூர் பகுதியில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

ADMK candidate banner of victory before the vote count

இதுகுறித்து மற்ற கட்சிகள் தேர்தல் அலுவலருக்கு உடனடியாக தகவல் அளித்தனர், அளித்த கொஞ்சம் நேரத்துலையே பேனர் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டது. இதுதொடர்பாக காங்கேயம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.எஸ்.ராமலிங்கம் கூறும்போது, “இப்படிப்பட்ட ஒரு வேலையை யார் செய்தது என்றே தெரியவில்லை. ஆர்வக்கோளாரில் செய்தார்களா… அல்லது என்னுடைய நற்பெயரை கெடுக்கும் எண்ணத்தில் செய்தார்களா என்பது தெரியவில்லை.

எங்கள் கட்சிக்காரர்களிடம் விசாரித்தேன், அப்போது அவர்களும் தெரியவில்லை என்று கூறினர். திருப்பூர்மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடமும் புகார் அளிக்க இருக்கிறேன்” இவ்வாறு ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

Contact Us