யப்பா சாமி, அது நா இல்ல, சினிமா வாழ்க்கைக்கே வேட்டு வச்சிடுவீங்க போல.. புலம்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்(aishwarya rajesh) சமீபத்தில் கிளம்பிய வதந்தியால் தன்னுடைய கேரியர் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் போகிற பக்கமெல்லாம் அது நானில்லை நானில்லை என்று கூப்பாடு போட்டு கத்திக் கொண்டிருக்கிறாராம்.

தமிழில் காக்கா முட்டை படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று அதன் பிறகு தற்போது கவனிக்கப்படும் நாயகியாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அனுஷ்கா மற்றும் நயன்தாரா போல கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களிலும் முதல் சாய்ஸாக உள்ளார். நயன்தாரா கால்சீட் இல்லை என்றால் நேரடியாக அந்த கூட்டம் அப்படியே ஐஸ்வர்யா ராஜேஷ் பக்கம் வந்து விடுகிறது.

இப்படி கேரியர் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில்தான் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்த படம் ஹிட்டானதில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மகிழ்ச்சி இல்லையாம். அதற்கு காரணம் நம்ம வீட்டு பிள்ளை படம் வெளியான பிறகு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தொடர்ந்து தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.

அதுவும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு வந்தால் யாருக்குத்தான் கோபம் வராது. அப்படித்தான் தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்ற கனவில் இருந்தவரை ஷாக்காக்கும் விதமாக தற்போது அல்லு அர்ஜுன் தங்கையாக புஷ்பா படத்தில் நடிக்கப் போகிறார் என செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

இதைக் கேள்விப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் தான் போகுமிடமெல்லாம் புஷ்பா படத்தில் நான் நடிக்கவில்லை என மேடை போட்டு கூப்பாடு போடுகிறாராம்.

 

Contact Us