முல்லைத்தீவில் மர்மக் கும்பலின் அட்டகாசம்; நையப்புடைத்த மக்களால் பரபரப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இனம் தெரியாத கும்பல் ஒன்று நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உண்ணாப்புலவு பகுதியிலேயே வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் தாக்குதல் நடத்த வந்த மூவர் பொலிஸாரிடம் வசமாக மாட்டிக் கொண்டனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உண்ணாப்புலவு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் மீது வாள்கள் பொல்லுகளுடன் வந்து, வீட்டு உரிமையாளர் மீது மிளகாய்த்தூள் வீசிவிட்டு தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்.

அதேவேளை, வீதியால் சென்ற இளைஞர் ஒருவர் சம்பவத்தை அவதானித்து ஊர்மக்களை அழைத்துள்ளனர். இந்நிலையில், மக்கள் ஒன்று கூடியதையடுத்து அந்தக் கும்பல் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளது.

அதன் போது இருவர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இவர்களை ஏற்றி வந்த முச்சக்கர வண்டி சாரதியும் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், முல்லைத்தீவு பொலிஸார் மூவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

Contact Us